பாரதியின் சில வரிகள்....

தமிழில் வலைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை, மணதில் நின்ற பாரதியின் சில எழுச்சிமிகு வரிகளுடன் தொடங்குகிறது......

தேடி சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடி துன்பம் மிக உழன்று –பிறர்
வாட பலசெயல்கள் செய்து –நரை
கூடி கிழபருவமெய்தி –கொடுங்
கூற்றுக் கிரையென பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல் -நான்
வீழ்வெ னென்று நினைத்தாயோ ???

----------------------------------------------------------------------

நல்லதோர் வீணை செய்தே -- அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி -- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் !
வல்லமை தாராயோ, -- இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி! -- நில
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ..


விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீசுடினும் - சிவ சக்தியைப்
பாடுநல் அகங்கேட்டேன் அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

----------------------------------------------------------------------

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.

----------------------------------------------------------------------

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையார் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது முச்சினிலே


வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ் நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போலிளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ் நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்

வள்ளுவன் தன்னை உல கினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
யாரம் படைத்த தமிழ் நாடு

----------------------------------------------------------------------

காணி நிலம் வேண்டும், - பராசக்தி
காணி நிலம் வேண்டும்;- அங்கு
தூணி லழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் - அந்தக்
காணி நிலத்திடையே - ஓர்
மாளிகை கட்டித் தரவேண்டும்;-
அங்கு கேணி யருகினிலே - தென்னைமரம்
கீற்று மிள நீரும்.

பத்துப் பனிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;- நல்ல
முத்துச்சுடர் போலே - நிலாவொளி
முன்பு வரவேணும்;- அங்குக்
கத்துங் குயிலோசை - சற்றே
வந்து காதிற் படவேணும்;- என்றன்
சித்த மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

----------------------------------------------------------------------

நின்னைச் சரண்டைந்தேன் --- கண்ணம்மா
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரண்டைந்தேன் --- கண்ணம்மா
நின்னைச் சரண்டைந்தேன்

----------------------------------------------------------------------

சாத்திரம்பேசுகிறாய்,- கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ
ஆத்திரங் கொண்டவர்க்கே,- கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில் - வதுவை முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ?- இது பார்,
கன்னத்து முத்தமொன்று!

----------------------------------------------------------------------

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!

----------------------------------------------------------------------

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !!!

Comments

Popular posts from this blog

Utilizing WFH Efficiently

Wandering to write..

Back!