பாரதியின் சில வரிகள்....
தமிழில் வலைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை, மணதில் நின்ற பாரதியின் சில எழுச்சிமிகு வரிகளுடன் தொடங்குகிறது...... தேடி சோறு நிதம் தின்று – பல சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம் வாடி துன்பம் மிக உழன்று –பிறர் வாட பலசெயல்கள் செய்து –நரை கூடி கிழபருவமெய்தி –கொடுங் கூற்றுக் கிரையென பின்மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போல் -நான் வீழ்வெ னென்று நினைத்தாயோ ??? ---------------------------------------------------------------------- நல்லதோர் வீணை செய்தே -- அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி -- எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் ! வல்லமை தாராயோ, -- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே சொல்லடி சிவசக்தி! -- நில சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ.. விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன் நசையறு மனங்கேட்டேன் - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன் தசையினைத் தீசுடினும் - சிவ சக்தியைப் பாடுநல் அகங்கேட்டேன் அசைவறு மதிகேட்டேன் - இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? ---------------------------------------------------------------------- மனதி லுறுதி வேண்டும், வாக்...